2000 தாள்களை தேடி :
எங்கே இருக்கிறாய் வராத 2000 தாள்களே ?
உன்னை வாங்கிபோட வங்கிகள் காத்து நிற்கிறது
கிழவிகளின் முந்தானை முடிப்பில் இருக்கிறாயோ ?
அல்லது மொல்லமாரிகளின் பாதாள அறைகளில் இருக்கிறாயோ ?
அமலாக்க துறை கண்காணிப்பில் இருந்து தப்பித்த நீ
செல்லரிது போவாயோ
அல்லது போதை வஸ்துகளாய் மாறி பிள்ளைகளின் வாழ்வை கெடுப்பாயோ ?
எங்கே இருக்கிறாய்
போலி தாள்களை ஒழிக்க வந்தாய்
போலி ஆனாயோ?
மோடி மஸ்தான் வித்தையில்
மாயமாய் போனாயோ ?